Regional01

துறையூர் அருகே கஞ்சா செடி வளர்த்த நாட்டு வைத்தியர் கைது

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள தளுகை பாதர்பேட் டையைச் சேர்ந்த நடராஜன் மகன் சங்கர்(36). நாட்டு வைத்தியரான இவர், தனது வீட்டருகே கஞ்சா செடியை வளர்த்து வருவதாக உப்பிலியபுரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கஞ்சா செடி வளர்த்து வருவது உறுதி செய்யப்பட்டது.

விசாரணையின்போது, மருந் துகள் தயாரிப்பதற்காக வீட்டில் கஞ்சா செடியை வளர்த்து வரு வதாக சங்கர் குறிப்பிட்டார். எனி னும் இது குற்றச் செயல் என்ப தால் உப்பிலியபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து சங்கரை நேற்று முன்தினம் கைது செய்து, கஞ்சா செடியை அழித்தனர்.

SCROLL FOR NEXT