தி.மலை அடுத்த தண்டரை கிராமத்தில் ஜல் ஜீவன் திட்ட பணிகளை ஆய்வு செய்த பிறகு கிராம மக்களிடம் கலந்துரையாடிய மத்திய குழுவினர். 
Regional02

ஜல் ஜீவன் திட்ட பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 16 ஊராட்சிகளில் ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக ரூ.9.12 கோடி மதிப்பீட்டில் 16 ஆயிரத்து 393 வீடுகளுக்கு சமச்சீர் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்கான பணிகள் தண்டரை ஊராட்சியில் நடைபெற்று வருகிறது. இதனை, மத்திய குழு பார்வையாளர்களான அம்பரிஷ், அமித்ரஞ்சன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது அவர்கள், தண்டரை ஊராட்சியில் ரூ.61 லட்சத்தில் 520 சமச்சீர் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள வீடுகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆனந்தன், ஒன்றிய குழுத் தலைவர் கலைவாணி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர். 

SCROLL FOR NEXT