காந்திய மக்கள் இயக்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் பெரியசாமி (45). ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் வீட்டுக்கு அருகே வசிக்கும் 12 வயது சிறுமிக்கு ஆபாச படங்களை காண்பித்து பாலியல் ரீதியான தொந்தரவுகளில் ஈடுபட்டதாக சிறுமியின் பெற்றோர் ஈரோடு மாவட்ட எஸ்.பி. தங்கதுரையிடம் புகார் அளித்தனர்.
எஸ்.பி. உத்தரவின்படி பவானி மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், காந்திய மக்கள் இயக்கம் ஈரோடு மாவட்ட தலைவர் பெரியசாமி மீதான புகார் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர். பெரியசாமியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார்.