Regional02

தடுப்பு காவல் சட்டத்தில் இளைஞர் கைது

செய்திப்பிரிவு

மரக்காணம் அருகே கரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானவேல் (22). இவர் மதுவிலக்கு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் மரக்காணம் போலீஸார் இவரை கைது செய்து, கடலூர் சிறையில் அடைத்தனர்.

இவரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும்பொருட்டு,எஸ்பி ராதாகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தடுப்புக் காவல் சட்டத்தில் ஞானவேலை கைது செய்ய உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை ஞானவேலிடம் மரக்காணம் போலீஸார் கடலூர் சிறை ஊழியர்கள் மூலம் அளித்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இந்தாண்டில் 23 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்திலும், 25 பேர் மதுவிலக்கு தடுப்புச் சட்டத்திலும், 5 பேர் மணல் கொள்ளை தடுப்புச் சட்டத்தின்கீழும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT