இதில், சாலை பராமரிப்பை தனியாருக்கு வழங்குவதை கைவிட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாதப் பணி நீக்கக் காலத்தை பணிக் காலமாக அறிவித்து ஊதியம் வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.