மதுரை வண்டியூர் சவுராஷ்ட்ராபுரத்தில் அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்து பார்வையிட்டார் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. 
Regional01

மதுரையில் அம்மா மினி கிளினிக் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ திறந்து வைத்தார்

செய்திப்பிரிவு

ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கிளினிக் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரையிலும் செயல்படும். சனிக்கிழமை மட்டும் விடுமுறை. ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவமனை பணியாளர் இருப்பார்கள்.

இங்கு ரத்த அழுத்தப் பரிசோதனை, சர்க்கரை அளவு, கர்ப்பிணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக அளிக்கப்படும். மருந்து, மாத்திரைகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன், நகர் நல அலுவலர் குமரகுருபரன், துணை ஆணையாளர் (பொ) ராஜேந்திரன், உதவி ஆணையாளர் பிரேம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT