ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சட்டப்பூர்வமான இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
மத்திய கல்வித் துறை அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்பி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மத்திய கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை இடஒதுக்கீடு சட்டம்-2006, ஆசிரியர் பணியிடம் இடஒதுக்கீடு சட்டம்-2019 ஆகியவை குறித்து ஆராய அமைக்கப்பட்டிருந்த குழுவின் பரிந்துரைகளை நிராகரிக்க வேண் டும்.
இக்குழுவின் பரிந்துரைகள் சமூகநீதிக் கொள்கைகளுக்கு எதிரானதாக உள்ளது.
ஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை, பேராசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு அமலாக்கம் குறித்து மத்தியக் கல்வி அமைச்சகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சட்டப்பூர்வமான இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண் டும் என்றார்.