மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோ தனையில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை யடுத்து மாநிலத்தில் உள்ள மற்ற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பரிசோதனை செய்வதற்கு சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது. இவர் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, பேராசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கும் கரோனா பரிசோதனை செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.