மதுரை டாக்டர் டி.திருஞானம் தொடக்கப் பள்ளி மற்றும் நூல் வனம் அமைப்பு சார்பில் பனையூர் பகுதியில் ‘வீதி நூலகம்’ அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவுக்கு பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர் முத்துராஜா தலைமை வகித்தார்.
நூல்வனம் அமைப்பாளரும் தலைமை ஆசிரியருமான க.சரவணன் பனையூரைச் சேர்ந்த பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களிடம் புத்தகங்களை வழங்கினார். இதழ்தான அமைப்பாளர் அசோக் குமார் வீதி நூலகத்துக்கான நூல்களை வழங்கினார்.