Regional01

ஏழைகளுக்கு கொடுப்பதை தடுப்பவர்கள் வென்றதாக சரித்திரம் இல்லை முதல்வர் பழனிசாமி கருத்து

செய்திப்பிரிவு

ஏழைகளுக்கு நிதி கொடுப்பதை தடுத்து நிறுத்துபவர்கள் என்றைக்கும் வென்றதாக சரித்திரம் இல்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி அடுத்து எட்டிக்குட்டை மேடு பகுதியில் அம்மா மினி கிளினிக்கை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்து பேசியதாவது:

பொங்கல் பரிசு அறிவித்தது சுயநலம் என எதிர்க்கட்சித் தலைவர் ட்விட்டர் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்த முறை பொங்கல் அன்று மக்களுக்கு ரூ.1,000 கொடுத்தோம். அப்போது நன்றாக இருந்தோம். இப்போது கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பது தவறா?. ஏழை மக்களுக்கு கொடுப்பதை தடுத்து நிறுத்துபவர்கள் என்றைக்கும் வென்றதாக சரித்திரமில்லை.

புயல், வெள்ளம் பாதிப்புகளை டெல்டா மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டிருக்கிறேன்.

அவர்களுக்கு தைத்திருநாள் தான் மகிழ்ச்சியான நாள் தமிழர்கள் அனைவரின் இல்லத் திலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். அப்படி கொண்டாட கொடுப்பதை சுயநலம் என்று கூறலாமா?. மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், நிதி கொடுக்க வேண்டும் என்றார்.

இப்போது, அதை மாற்றிப் பேசுகிறார். ஏழைகளுக்கு கொடுப்பது சுயநலமா?

இவ்வாறு முதல்வர் பேசினார்.

SCROLL FOR NEXT