Regional02

வேளாண் சட்டத்துக்கு எதிராக பேரணி நடத்த முயன்ற இணையதள நண்பர்கள் கைது

செய்திப்பிரிவு

வேளாண் சட்டத்துக்கு எதிராக நேற்று பேரணி நடத்த முயன்ற இணையதள நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தேரடிப் பகுதியில் இருந்து நேற்று பேரணி நடத்தப்போவதாக, இணைய தள நண்பர்கள் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படி, நேற்று மாலை தேரடியில் இருந்து இணையதள நண்பர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பேரணியாக செல்ல புறப்பட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

SCROLL FOR NEXT