Regional02

தூத்துக்குடி அருகே வீட்டில் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அகப்பைகுளத்தில் புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக நாசரேத் போலீஸாருக்கு தகவல் கிடைத்து. இதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீஸார் நேற்று அந்த பகுதியைச் சேர்ந்த பேபி அலிஸ் புளோரா என்பவருக்கு சொந்தமான வீட்டில் சோதனை செய்தனர்.

அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் 37 சாக்கு மூட்டைகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது. நாசரேத்மோசஸ் தெருவைச் சேர்ந்தஜெயசீலன் மற்றும் திசையன்விளையைச் சேர்ந்த கொம்பையா ஆகியோர் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. போலீஸார் ரூ.10.40 லட்சம் மதிப்பிலான 520 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தார். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT