TNadu

டெல்லி போராட்டத்தில் இறந்த விவசாயிகளுக்குநாளை அஞ்சலி

செய்திப்பிரிவு

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன் தஞ்சாவூரில் நேற்றுசெய்தியாளர்களிடம் கூறிய தாவது:

3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பங்கேற்ற விவசாயிகளில், இதுவரை 36 பேர்உயிரிழந்துள்ளனர். அவர்களின்உருவப் படங்களை வைத்து அஞ்சலி நிகழ்ச்சி, தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் நாளை (டிச.20) நடைபெற உள்ளது.

வேளாண் சட்டங்களை மத்தியஅரசு திரும்பப் பெற வலியுறுத்தி டிச.29-ம் தேதி தஞ்சாவூரில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது என்றார்.

SCROLL FOR NEXT