Regional02

வரும் 23-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

செய்திப்பிரிவு

திருப்பூரில் வரும் 23-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை எதிரொலியாக, தேசிய தகவலியல் மைய தொழில்நுட்ப உதவியுடன் வரும் 23-ம் தேதி காலை 10.30 மணிக்கு, காணொலிக்காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறஉள்ளது.

அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கில் இருந்து விவசாயிகள் காணொலிக் காட்சி மூலம் ஆட்சியரை அணுகி, விவசாயம் தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT