Regional01

பனையூரில் வீதி நூலகம் தொடக்கம்

செய்திப்பிரிவு

மதுரை டாக்டர் டி.திருஞானம் தொடக்கப் பள்ளி மற்றும் நூல் வனம் அமைப்பு சார்பில் பனையூர் பகுதியில் ‘வீதி நூலகம்’ அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான திறப்பு விழாவுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் முத்துராஜா தலைமை வகித்தார்.

நூல்வனம் அமைப்பாளரும் தலைமை ஆசிரியருமான க.சரவணன் பனையூரைச் சேர்ந்த பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களிடம் புத்தகங்களை வழங்கினார். இதழ்தான அமைப்பாளர் அசோக் குமார் வீதி நூலகத்துக்கான நூல்களை வழங்கினார்.

ஆசிரியர்கள் பாக்ய லெட்சுமி, உஷா தேவி, கீதா, சுமதி, சரண்யா, வெங்கடலெட்சுமி, சித்ராதேவி, பிரேமலதா உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT