Regional02

ஜனவரி 15-ம் தேதிக்குள் 7,500 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகளிடம் தொடர் அங்கீகார ஆணையை வழங்கினார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

செய்திப்பிரிவு

7,500 அரசுப் பள்ளிகளில் வரும் ஜன.15-ம் தேதிக்குள் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமை ச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 360 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கான தொடர் அங் கீகார ஆணை வழங்கும் நிகழ் ச்சி திண்டுக்கல்லில் நேற்று நடை பெற்றது. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலை மை வகித்தார். ஆட்சியர் மு.விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அலு வலர் செந்தில்வேல் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசிய தாவது: ஐ.ஏ.எஸ். தேர்வில் பங் கேற்போருக்கு தேவைப்படும் அளவுக்குப் பாடப் புத்தகங்களின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.கரோனா ஊரடங்கு காலத்தில் செல்போன் வாங்க முடியாத மாணவர்களின் நலன் கருதி தொலைக்காட்சி மூலம் வகுப் புகள் நடத்தப்படுகின்றன. வரும் ஜன.15-ம் தேதிக்குள் 7,500 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்க திட் டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பள்ளிகள் திறப்பதைவிட மாணவர்களின் உயிர்தான் முக்கியம். கல் வியாளர்கள், பெற்றோர்களின் கருத்தை அறிந்த பின் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப் படும். கல்விக் கட்டணம் வசூலிப் பது குறித்து தனியார் பள்ளிகள் மீது புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT