Regional02

விருதுநகரில் தொடர் மழை சுவர் இடிந்து 2 வீடுகள் சேதம்

செய்திப்பிரிவு

விருதுநகர் பெரியார்பாளையத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. தொடர் மழையால் அப்பகுதியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்பவரது வீட்டின் மண் சுவர் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. அதே பகுதியில் ஆறுமுகம் என்பவரது வீட்டின் மண் சுவர் நேற்று காலை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட இருவரும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT