Regional02

சிலாப்பில் மோதி குழந்தை உயிரிழப்பு

செய்திப்பிரிவு

தேனி பழைய போஸ்ட் ஆபீஸ் ஓடைத் தெருவைச் சேர்ந்தவர் பிரபு. சலவைத் தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுடைய மகள் அனன்யா (2) நேற்று முன்தினம் இரவு வீட்டில் பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பந்தை எடுக்கச் சென்றபோது, அங்கிருந்த சிலாப்பில் மோதியதில் நெற்றி யில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு குழந் தையைக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை குழந்தை உயிரிழந்தது. தேனி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT