Regional01

பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 6 பேர் கைது

செய்திப்பிரிவு

திருச்சியில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய கல்லூரி மாணவர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டை அருகேயுள்ள சாந்தா புரம் குடித்தெருவைச் சேர்ந்த முத்தையன் மகன் கோபிநாத்(22). கல்லூரி மாணவரான இவர் கடந்த 5-ம் தேதி, நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அரிஸ்டோ மேம்பாலத்தில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண் டாடியுள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி யது.

அதைக் கவனித்த திருச்சி மாநகர சமூக வலைதள கண்காணிப்பு பிரிவு தலைமைக் காவலர் பாண்டியன், பொதுமக் களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்டோன்மென்ட் போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து கோபிநாத், அவரது நண்பர்களான அதே ஊரைச் சேர்ந்த பசுபதி(22), ரெங்கராஜ் (19), சந்தோஷ்குமார்(19), கிருஷ்ணமூர்த்தி(19), எட்டரை காந்தி நகரைச் சேர்ந்த கபில்(22) ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இதுதவிர சாந்தாபுரத்தைச் சேர்ந்த மோகன், பிராட்டியூரைச் சேர்ந்த ராஜேஷ், ராஜா ஆகியோ ரைத் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT