அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகேயுள்ள செட்டித் திருக் கோணம் அங்காடித்தெரு மற் றும் தெற்குத்தெருவில் உள்ள சாலை தொடர்மழையின் கார ணமாக சேறும் சகதியுமாக காணப்படுகிறது.
இதனால், கிராம மக்கள், குழந்தைகள் வெளியில் செல்ல மிகவும் சிரமமடைகின்றனர். இதுகுறித்து ஊராட்சியில் தெரிவித் தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, கிராம மக்கள் சேறும் சகதியுமாக உள்ள சாலையில் நேற்று நாற்று நட்டு, தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அதிகாரிகள் அங்கு சென்று, சாலை உடனடியாக சீரமைக்கப் படும் என தெரிவித்தனர்.