அரியலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் காரில் நேற்று சோதனை மேற்கொள்ளும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார். 
Regional01

அரியலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

செய்திப்பிரிவு

அரியலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.

கீழப்பழுவூர் அருகே அரியலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று மாலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் சந்திரசேகர் தலைமையிலான போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அலுவலகத்தில் இருந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் மற்றும் வாகன ஆய்வாளர், அலுவலக உதவியாளர்கள், ஓட்டுநர், இடைத்தரகர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும், அலுவலக அறைகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் கார் உள்ளிட்டவற்றையும் போலீஸார் சோதனை நடத்தினர். இந்த சோதனை இரவிலும் தொடர்ந்து நடைபெற்றது.

SCROLL FOR NEXT