Regional01

வடக்கு தாழையூத்தில் பள்ளி வகுப்பறை கட்ட பூமி பூஜை

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியம் வடக்கு தாழையூத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இப்பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் 30 குழந்தைகள் பயில வகுப்பறைகள் இல்லாத தால், பள்ளி நிர்வாகமும், ஊர் பொதுமக்களும், மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜாவிடம் இது தொடர்பாக கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து அவர் தனது சொந்த செலவில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் 455 சதுர அடியில் புதிய வகுப்பறை கட்டுவதற்கு முன்வந்தார். இதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

கட்டிட பணிகளை கணேசராஜா தொடங்கி வைத்தார். மாவட்ட அதிமுக துணைச் செயலாளர்கள் பாலமுருகன், கவிதா, மாவட்ட மாணவரணி செயலாளர் சிவபாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT