Regional02

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் பின்புறம் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட சேமிப்பு கிடங்கில் 3,339 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,869 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1,996 விவிபாட் இயந்திரங்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் தொடர்பான முதல்நிலை சரிபார்ப்புப் பணிகள் கடந்த டிச. 2-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. பெங்களூரு பெல் நிறுவனப் பொறியாளர்கள் இந்த சரிபார்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சரிபார்ப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT