மதுரை தல்லாகுளம் பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாநில அமைப்புச் செயலாளர் பி.ரிச்சர்ட் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் செல்வின் சத்தியராஜ், காரைக்குடி மாவட்டச் செயலாளர் எம்.பூமிநாதன், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் என்.உத்தரகுமார், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் என்.சோணைமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். 4ஜி சேவை தொடர்பாக தலைமைப் பொதுமேலாளர் தொழிற்சங்கத்தினரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நவ.5-ம் தேதி இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை உடனே அமல்படுத்த வேண்டும் என வலியறுத்தினர். பொருளாளர் ஆர்.சண்முகவேல் நன்றி கூறினார்.