மதுரையைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 12 வயது, அதற்கு மேற்பட்டோர் என இரு பிரிவாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு வக்பு வாரியக் கல்லூரி முன்னாள் முதல்வர் அப்துல் காதிர் பரிசுகளை வழங்கினார்.
முன்னதாக, கே.கே.நகரில் நடந்த நிகழ்ச்சிக்கு பைத்துல்மால் டிரஸ்ட் தலைவர் ஷேக் தாவூத் தலைமை தாங்கினார். செயலாளர் அப்துல் சலாம் வரவேற்றார். ஜமாத் தலைவர் அப்துல் ரஹீம் சேட் வாழ்த்துரை வழங்கினார். மைதீன் பாவா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிந்தா செய்திருந்தார்.