மதுரை காந்தி நினைவு அருங் காட்சியகத்தில் காந்தியுக இந் திய விடுதலை இயக்கத்தில் ‘வீரத்தமிழ் மகளிர்’ நூல் வெளி யீட்டு விழா நடந்தது.
அருங்காட்சியகச் செயலாளர் க.மு.நடராஜன் தலைமை வகித்தார். காந்திய சிந்தனைக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முத்துஇலக்குமி வரவேற்றார்.ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஏ.எல்.சொக்கலிங்கம் நூலை வெளியிட, மாநில வரிகளுக்கான துணை ஆணையர் ம.மகேஷ்வரி பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு காந்தி நினைவு நிதிச் செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை சர்வோதய இலக்கியப் பண்ணைச் செய லாளர் புருஷோத்தமன், காந்தி நினைவு அருங்காட்சியக இயக்குநர் கே.ஆர்.தத்தாராவ், கல்வி அலுவலர் ஆர்.நடராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.