Regional01

ஆமை வேகத்தில் வைகை ஆறு ஸ்மார்ட் சிட்டி பணிகள் போக்குவரத்து மாற்றத்தால் அன்றாடம் அல்லல்படும் மதுரை நகர மக்கள்

செய்திப்பிரிவு

வைகை ஆற்றின் இரு கரைகளிலும் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் போக்குவரத்து மாற்றம் காரணமாக நகருக்குள் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இதனால், மக்கள் அன்றாடம் அல்லல்படுகின்றனர்.

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்றின் இருபுறமும் நான்குவழிச் சாலைகளும், பூங்காக்களும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைகளும் அமைக்கப்படு கின்றன.

இப்பணிகள் கடந்த ஆண்டு முதலே நடக்கின்றன. தற்போது வரை நிறைவுபெறவில்லை. அதி லும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஆமைவேகத்தில் நடக்கின்றன. தற்போது வரை 25 சதவீதம் பணிகள்கூட வைகை ஆற்றில் நடக்கவில்லை.

வைகை ஆற்றில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடப்பதோடு குருவி க்காரன் சாலைப்பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி நடக் கிறது.

இதனால், அருகே அமைக் கப்பட்ட தரைப்பாலம் வழியாக ஒட்டுமொத்த நகரப்போக்கு வரத்தும் மாற்றிவிடப்பட்டுள்ளது.

அதனால், நகர் பகுதியில் ஏற் கெனவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் தற்போது அடைமழையால் முற்றிலும் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. அதனால், வைகை ஆறு ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விரைவாக முடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

குறிப்பாக வடகரை அல்லது தென்கரை என ஏதேனும் ஒரு பகுதியிலாவது பணிகளை விரைந்து முடித்தால்கூட நகரின் போக்குவரத்துப் பிரச்சினை ஓரள வேணும் தீர வாய்ப்பு ஏற்படும். ஆனால், வைகை ஆற்றின் இரு கரைகளிலும் பணிகள் முடிவ டையாமல் உள்ளதால் மதுரை நகர மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

ஆற்றின் இரு கரைகளிலும் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் இன்று வரை அகற்றப்படாமல் அவற்றின் அருகே ஆங்காங்கே பணிகள் நடப்பதால் பணி முழுமையடைவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதன்காரணமாக போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் சிரமம் மாதக் கணக்கைவிட ஆண்டுக் கணக்கில் நீடிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரை நகர மக்களின் பிரச்சினைகளை அதிகாரிகளோ ஆட்சியாளர்களோ கண்டுகொள்ளவில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT