மதுரையில் ஆட்டோ உரிமையா ளர்கள், ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செல்வம், போக்குவரத்து காவல் துணை ஆணையர் சுகுமாறன் ஆகியோர் பேசினர்.
டீசல் ஆட்டோக்களில் விதி மீறல்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படாது. அவற்றின் உரிமம் தற்காலி கமாக ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தனர். இதில், காவல் உதவி ஆணையர்கள் திருமலைக் குமார், மாரியப்பன், சட்டம்-ஒழுங்கு உதவி ஆணையர் சூரக்குமார், தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சிங்காரவேலன், மோட்டார் வாகன ஆய்வாளர் அனிதா, போக்குவரத்து ஆய்வாளர் செந் தில்குமரன் பங்கேற்றனர்.