Regional01

கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்

செய்திப்பிரிவு

சேலம்-சென்னை இடையிலான எட்டு வழிச் சாலை திட்டம் தொடர்பாக கடந்த 8-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், எட்டு வழிச் சாலை தொடர்பாக புதிய அரசாணை வெளியிட்டு திட்டத்தை தொடங்க வேண்டும் என தெரிவித்தது. இந்நிலையில், “இத்திட்டத்துக்கு 92 சதவீதம் விவசாயிகள் நிலம் தர தயாராக உள்ளதாக” அரியலூரில் செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வரின் தகவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று மாலை சேலம் மாவட்டம் பாரப்பட்டி அருகே உள்ள பூமாங்காடு பகுதியில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் ஆடு, மாடுகளுடன் குடும்பத்தினருடன் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT