மேட்டூர் அடுத்த பொட்டனேரியில் உள்ள ஜே எஸ் டபிள்யூ ஆலையில், அவசர கால ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
ஆலையில் அவசர கால சூழ்நிலை ஏற்பட்டால் அதை குறைக்க அல்லது அதை எதிர் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்தி, அதை மேம்படுத்தும் நடை முறைகள் தொடர்பாக இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குநர் புகழேந்தி, துணை இயக்குநர் சீனிவாசன், வட்டாட்சியர் சுமதி, நங்கவள்ளி மற்றும் மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சிராஜ், ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு அவசர காலத்தை எதிர்கொள்வது குறித்து விளக்கினர்.
ஏற்பாடுகளை ஆலையின் முதன்மை அலுவலர் பிரகாஷ் ராவ், உதவி துணைத் தலைவர் பிரிகேடியர் எஸ்.தாகூர் ஆகியோர் செய்திருந்தனர்.