Regional01

கரூர் அருகே திருச்சி இளைஞர் வெட்டிக் கொலை

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே மூலிமங்கலம் பிரிவு அருகே நேற்று மோட்டார்சைக்கிளில் வந்த இளைஞரை, 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 6 பேர் வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில், முகம் மற்றும் கைகள் சிதைந்து படுகாயமடைந்த இளைஞரை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். கரூர் தனியார் மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் திருச்சி தென்னூர் அண்ணாநகர் புதுமாரியம்மன் கோயில் மேட்டுத்தெருவைச் சேர்ந்த ரஞ்சித்குமார்(27) என தெரியவந்தது. திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள ரஞ்சித்குமார், கடந்த 2 ஆண்டுகளாக கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் தங்கி எலெக்ட்ரீஷியன் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.

இதுகுறித்துதொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT