திருவண்ணாமலை அருகே மளிகை கடையில் ரூ.5 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சி செல்வா நகரில் மளிகை கடை நடத்தி வருபவர் சிவா. இவர், நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு சென்றுள்ளார். பின்னர் அவர், நேற்று காலை கடையை திறந்துள்ளார். அப்போது, கடையில் உள்ள பணம் வைக்கும் பெட்டி திறந் திருந்தது.
மேலும், அதிலிருந்த ரூ.5 லட்சத்தை காணவில்லை. கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து திருவண்ணா மலை கிழக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.