Regional02

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

15 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தி.மலை மாவட்டம் போளூரில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்த வேண்டும். 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மட்டும் மருத்துவ உள் இடஒதுக்கீடு வழங் கப்படும் என அரசாணை பிறப் பிக்க வேண்டும். ஆசிரியர் நியமனத்துக்கான வயது வரம்பை 40-ஆக குறைத்து வெளியிடப்பட்ட அரசாணையை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் தஞ்சி தலைமை வகித்தார்.

முன்னாள் வட்டார துணைத் தலைவர் விஜயசெல்வி, தலைமை ஆசிரியைகள் அம்பிகா உள்ளிட்ட வர்கள் முன்னிலை வகித்தனர். வட்டார துணைத் தலைவர் கிரி வரவேற்றார். கோரிக்கைகளை முன் வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் டேவிட்ராஜன் சிறப்புரையாற்றினார். வட்டார செயலாளர் லீமாரோஸ், முன்னாள் வட்டார தலைவர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். வட்டார துணைச் செயலாளர் யுககலைவன் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT