நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் குழுக்களாகப் பிரிந்து, மாவட்டம் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், முகக் கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.13000 மற்றும் தடை செய்யப்பட்ட 26.10 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து,அபராதத் தொகையாக ரூ.64000என ரூ.77000 வசூல் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் வியாபாரிகளும், பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் தடை செய்யப்பட்ட குடிநீர்,குளிர்பான பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.