இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறும்போது, "கடந்த 10 நாட்களாக இதுபோல் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. கடும் துர்நாற்றம் வீசுவதால் எதற்கும் இந்த தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து இவ்வாறு குடிநீர் வந்தால் அனைவரும் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக இதை சீர்படுத்த வேண்டும்" என்றனர்.