கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், சிதம்பரம் காந்திசிலை அருகில் நேற்று ஏர் கலப்பை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.பி.கே.சித்தார்த்தன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தவர்த்தாம்பட்டு என்.விஸ்வநாதன், சத்தியமூர்த்தி, பரமவெங்கடேசன், ஜெயச்சந்திரன், புவனகிரி வட்டார தலைவர் சேரன்,திட்டக்குடி அன் பரசு, இளங்கீரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். சிதம்பரம் நகர காங்கிரஸ் தலைவர் பாலதண்டா யுதம் வரவேற்று பேசினார்.
கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருண்ணன், மாநில பொதுக் குழு உறுப்பினர் செந்தில்நாதன், மேலிடப் பார்வையாளர் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
வட்டார தலைவர்கள் ஜெய சீலன், ரவிசந்திரன், செழியன், பழனிவேல், வைத்தியநாதசாமி, மனோகரன், நஜிர்அகமது, வினோபா, கட்டாரி சந்திரசேகர், சந்துரு உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மத்திய அரசை கண்டித்தும், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.