மதுரை தினமணி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (45). அண்ணாநகர் ராஜசேகரன் (55). இருவரும் உறவினர்கள். கடந்த 2009-ல் சுரேஷிடம் ராஜசேகரன் அவசர பணத் தேவைக்காக 25 பவுன் நகை களை வாங்கினார்.
இந்நிலையில், ராஜசேகரன், வாங்கிய நகைகளை திருப்பித் தரவில்லை.
இது தொடர்பாக கேட்டபோது, அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கடன் பெற்ற நகை களைத் தர முடியாது எனக் கூறியதால் மதுரை 7-வது ஜூடிசியல் நீதிமன்றத்தில் சுரேஷ் வழக்குத் தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில், ராஜசேகரன், அவரது மனைவி சந்திரா (53) ஆகியோர் மீது அண்ணாநகர் போலீஸார் வழக் குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.