மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட பொதுச்செயலாளர் பொன்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் தங்கவேல் பாண்டியன், பொரு ளாளர் மூர்த்தி, சிஐடியூ கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் வி.பிச் சைராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேல்நிலைக் குடிநீர்த் தொட்டி இயக்குபவர்கள், தூய்மைக் காவலர்களுக்கு ஊதிய உயர்வு அரசாணையை வெளியிட வேண்டும். பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதச்சம்பளம் போனஸ், ஒஎச்டி ஆபரேட்டர்களு க்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தினர்.
ராமநாதபுரம்
சங்க மாவட்டத் தலைவர் சந்தானம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.அய்யாதுரை, துணைத் தலைவர் எஸ்.கணேசமூர்த்தி, சிஐடியூ மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி, துணைச் செயலாளர் எம்.குமார் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் உட்பட 500 பேர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
சிஐடியூ மாவட்டச் செயலாளர் தேவா, மாவட்ட இணைச் செயலாளர் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.