மதுரை மாவட்டத்தில் திருடுபோன மொபைல்கள் தொடர்பான வழக்குகளை சைபர் கிரைம் போலீஸார் விசாரி த்தனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திருடுபோன ரூ. 3.13 லட்சம் மதிப்புள்ள 32 மொபைல்கள் மீட்கப்பட்டன. இவற்றை உரியவர்களிடம் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஒப்படைத்தார். காவல் கண்காணிப்பா ளரின் துரித நடவடிக்கையால் மாவட்டத்தில் இதுவரை ரூ.33 லட்சத்து 46 ஆயிரத்து 488 மதிப்புள்ள சுமார் 300 மொபைல்கள் கண்டறிந்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.