கிருஷ்ணகிரி தண்டு மாரியம்மன் கோயிலில் மண்டல பூஜை நிறைவையொட்டி, பக்தர்கள் பால் குடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று அபிஷேகம் செய்தனர். 
Regional01

தண்டுமாரியம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் தண்டு மாரியம்மன் கோயிலில் மண்டல பூஜை நிறைவடைந்ததையடுத்து, பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடத்தினர்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை நரசிம்ம சுவாமி கோயில் தெருவில் உள்ள தண்டுமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் முடிந்து 48-வது நாள் மண்டல பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடங்களை ஊர்வலமாக கொண்டு சென்றனர். பால்குட ஊர்வலம், நேதாஜி சாலை, காந்தி சிலை வழியாகச் சென்று பின்னர் கோயிலை வந்தடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT