சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள ரேஷன் கடை பணியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு நடந்தது.
சேலம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 132 விற்பனையாளர்கள், 40 எடையாளர்கள் பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 172 பணியிடத்துக்கும் 11,920 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இதில், தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். சேலம் சிஎஸ்ஐ பள்ளியில் வரும் 24-ம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடக்கிறது.
தேர்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் நேர்முகத் தேர்வை நடத்தினர்.