Regional02

6 எஸ்ஐக்கள் பணி இடமாற்றம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 காவல் உதவி ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல்கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தசங்கர் ஓட்டப்பிடாரம் காவல்நிலையத்துக்கும், தூத்துக்குடி குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறையில் பணியாற்றி வந்த வேல்ராஜ் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் பணியாற்றிவந்த சிவக்குமார் ஆகியோர் தென்பாகம் காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த எபனேசர்சிப்காட் காவல் நிலையத்துக்கும், சிப்காட் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பாலன் புதியம்புத்தூர் காவல் நிலையத்துக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர்முனியசாமி சூரங்குடி காவல்நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT