Regional01

உள்ளாட்சித் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை

செய்திப்பிரிவு

ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி உள்ளாட்சித் தொழிலாளர் சங்கத்தினர் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக சென்று ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத் தின் மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா தலைமை வகித்தார்.சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.தர், உள்ளாட்சித் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.திரவியம், பொரு ளாளர் வி.காயாம்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உள்ளாட்சித் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஆபரேட்டர்களுக்கு சிறப்பு கால முறை சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

SCROLL FOR NEXT