புளியங்குடி அருகே உள்ள புன்னையாபுரம் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்பவரது மனைவி முத்துலட்சுமி(48). இவர், நாராயணபேரியில் உள்ள தனது வயலில் வேலை பார்த்துகொண்டு இருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் முத்துலெட்சுமி அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டார். புகாரின்பேரில் புளியங்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். தனிப்படை போலீஸார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, நகை பறிப்பில் ஈடுபட்டது ராஜபாளையம், சம்மந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் (37) என்பது தெரியவந்தது. முருகனை போலீஸார் கைது செய்து, நகையை மீட்டனர்.
இதேபோல், அச்சன்புதூர் அருகே உள்ள வடகரை பகுதி யில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்த பெண்ணிடம் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் 8 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாகவும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் பாலஅருணாசலபுரம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன்(21), நாயகன்(20), விக்னேஷ்(21) என்பது தெரியவந்தது. இந்த 3 பேரையும் தனிப்படை போலீஸார் கைது செய்து, நகையை மீட்டனர்.
சுரண்டை அருகே உள்ள அச்சங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பரங்குன்றாபுரம் குளக்கரை பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த நபர் ரவியின் மனைவி அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றார். ரவி சுதாரித்துக்கொண்டதால் நகையை பறிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த அந்த நபர், இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றார். அவரை ரவி விரட்டிச் சென்றபோது, கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்த மக்கள் அந்த நபரை பிடித்து சுரண்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், விக்கிரமசிங்கபுரம் திருப்பதியாபுரம் பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ்(23) என்பது தெரியவந்தது. காயமடைந்த அருள்ராஜ் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், அவரை மருந்துவமனையில் சேர்த்தனர்.
ஏமாற்றம் அடைந்த அந்த நபர், இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றார். அவரை ரவி விரட்டிச் சென்றபோது, கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.