ஆலங்குளம் அருகே ரெட்டியார்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் இசக்கிதுரையின் உறவினர்கள். 
Regional01

ஆட்டோ ஓட்டுநர் கொலை ஆலங்குளம் அருகே சாலை மறியல்

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் இசக்கிதுரை(37). ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டார். ஊத்துமலை போலீஸார் விசாரணை நடத்தி சண்முகராஜ் (37) என்பவரை கைது செய்தனர். இந்நிலையில், இசக்கிதுரையின் உறவினர்கள் ரெட்டியார்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இசக்கிதுரை குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற வலியுறுத்தினர். காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

இதையடுத்து மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

SCROLL FOR NEXT