மார்கழி மாத பிறப்பையொட்டி திருநெல்வேலி டவுன் ரதவீதிகளில் பஜனை ஊர்வலம் நடைபெற்றது. படம்: மு.லெட்சுமி அருண் 
Regional01

நெல்லையில் மார்கழி பஜனை

செய்திப்பிரிவு

மார்கழி மாத பிறப்பையொட்டி திருநெல்வேலி டவுன் ரதவீதி களில் பஜனை ஊர்வலம் நடை பெற்றது. வீடுகளில் பெண்கள் மாக்கோலமிட்டனர்.

திருநெல்வேலி டவுனில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுக்க பஜனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மார்கழி மாத பிறப்பையொட்டி நேற்று காலையில் பஜனை குழுவினர் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி வீதிவலம் வந்தனர்.

இதுபோல் நாங்குநேரி பெருமாள்கோயில், களக்காடு மற்றும் அம்பாசமுத்திரம் பகுதி களிலும் மார்கழி பஜனை நடை பெற்றது.

SCROLL FOR NEXT