செஞ்சிக்கோட்டையில் 9 மாதங்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட் டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக செஞ்சிக் கோட்டை பார்வையாளர்களுக்கு தடைவிதித்து மூடப்பட்டிருந்தது. கடந்த 9 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது. இணையவழி மூலம் பணம் செலுத்தி கோட்டையை சுற்றிபார்க்கலாம் என்று, செஞ்சி கோட்டை நுழைவு வாயிலில் ஹிந்தி மொழியில் விரைவுக் குறியீட்டுடன் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. இதற்கு பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.உடனடியாக அருகில் தமிழிலும் பெயர்ப் பலகை வைக்கப்பட்டது. இதில் செஞ்சிக்கோட்டையை சுற்றிப் பார்க்க க்யூ ஆர் ஸ்கேன் செய்து ஆன் மூலம்பணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. க்யூஆர் ஸ்கேன் செய்து பணம் செலுத்தமுடியாமல் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனர். வழக்கம் போல நுழைவு சீட்டு மூலம் பணம் பெற்று அனு மதிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.