Regional02

கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை

செய்திப்பிரிவு

தேனி அருகே லட்சுமிபுரம் நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் குபேந்திரன்(47). இவரது மனைவி சுஜாதா(44). இருவரும் சென்னையில் உள்ள திருமங்கலத்தில் பேக்கரி நடத்தி வந்தனர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கடன் அதிகமானது.

பூர்வீகச் சொத்தை விற்று கடனை அடைக்கலாம் என்று ஊர் திரும்பினர். ஆனால், பல மாதங்களாக இடம் விற்பனை ஆகவில்லை. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான இருவரும் பழனிசெட்டிபட்டி விடுதியில் தங்கினர். நேற்று முன்தினம் இரவு குபேந்திரன் தூக்கு மாட்டியும், மனைவி சுஜாதா விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டனர். பழனிசெட்டிபட்டி சார்பு ஆய்வாளர் யாழிசைசெல்வன் விசாரித்து வருகிறார்.

SCROLL FOR NEXT