ஈரோடு மாவட்டம் அந்தியூரிலுள்ள பத்திரப் பதிவு சார் பதிவாளர் அலுவலகத்தில் நிலம், கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பதிவிற்காக செல்பவர்களிடம் லஞ்சம் கேட்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி திவ்யா தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் மாலை சோதனை மேற்கொண்டனர்.
அலுவலகத்தில் இருந்த பொதுமக்களை வெளியேற்றிய போலீஸார், பத்திரப்பதிவு ஆவணங்களைச் சரிபார்த்ததோடு, அலுவலகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். இதில், கணக்கில் வராத ரூ.67 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், பணம் பறிமாற்றம் தொடர்பான முக்கிய ஆவணங்களையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.