Regional01

லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை சார் பதிவாளர் மீது வழக்கு பதிவு

செய்திப்பிரிவு

லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத் திய சோதனையைத் தொடர்ந்து மணப்பாறை சார் பதிவாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் உப்பிலியபுரம் சார் பதிவா ளர் அலுவலகங்களில் கடந்த 12-ம் தேதி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது மணப்பாறையில் கணக்கில் வராத ரூ.1.51 லட்சம், உப்பிலியபுரத்தில் ரூ.81 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மணப்பாறை சார் பதிவாளர் வெ.புலிப்பாண்டியன், அவருக்கு உதவியாக இருந்த தவிட்டுப் பட்டியைச் சேர்ந்த தவமணி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, முதல் தகவல் அறிக்கையை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கூறும்போது, ‘‘மணப்பாறையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனைக்கு சென்றபோது, ஆவண அறைக் குள் வீசப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 2000, 500 ரூபாய் நோட்டுக்களையும், ஆவணங் களுக்குள் மறைத்து வைக்கப் பட்டிருந்த ரூ.13,500-ஐயும், சார் பதிவாளர் தங்கியிருந்த விடுதி அறையிலிருந்து ரூ.1.28 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், சார் பதிவாளர் புலிப் பாண்டியன், தனிப்பட்ட முறையில் தினக்கூலி அடிப்படையில் வேலைக்கு வைத்திருந்த தவமணி பணம் வசூல் செய்ய உதவியாக இருந்தது தெரியவந்தது.

இதேபோல, உப்பிலியபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனையிட்டபோது, அக்கட் டிடத்தின் மழைநீர் வடிகால் தொட்டிக்குள்ளும், உணவு அருந்தும் அறையில் 2 மேஜைக ளுக்கு இடையிலும் ரூ.81 ஆயிரம் மதிப்பிலான ரூ.500, ரூ.2000 நோட்டுகள் கிடந்தன. இதுதொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்றனர்.

SCROLL FOR NEXT